நிலக்கல்:

பரிமலை பெண்கள் விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலஅரசின் நிலைப்பாடு காரணமாக  நிலக்கல் பகுதியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை செய்து வருகின்றனர்.

அரசு பேருந்து உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, அதனுள் 10வயது முதல் 50வயதுக்கு உட்பட்ட  பெண்கள் உள்ளனரா என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். இது பெண்ணியவாதிகளிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் கடந்தஆண்டு (2018)  செப்டம்பர் 28ம் தேதி  உத்தரவிட்டது. இது கேரளா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் 48 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்சநீதி மன்றம், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு தொடரும் என்று கூறி, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது, சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டலபூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில்,  சில பெண்களும் கோவிலுக்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கேரளாவில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையடுத்து நிலக்கல் பகுதியில், காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாராவது உள்ளனரா  என சோதனை செய்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த பணியை இந்துவாவைச் சேர்ந்த  வலதுசாரி எதிர்ப்பாளர்கள் செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு, மாநிலத்தை ஆட்சி செய்துவரும்  இடதுசாரிஅரசான பினராயி தலைமையிலான அரசின் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.