பம்பா:
இந்த நிலையில், மாதாராந்திர பூஜையான, மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந்தேதி திறக்கப்படும் என்றும், அப்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என சமீபத்தில் தேவஸம்போர்டு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில தேவஸம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுரேந்திரன், 14ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
மேலும், ‘மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14ல் திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை மிதுனம் மாத பூஜைகள் நடைபெறும் என்றும், ஜூன் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்து உள்ளார்.