திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், நடிகர் ஜெய்ராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் மற்றும் தங்க வாசல் செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக சிறப்பு விசாரணைக்குழு 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த 2 வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் பெயராக உண்ணிகிருஷ்ணன் போற்றி பெயர் உள்ளது. சபரிமலை உபயதாரராக வலம் வந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த வழக்கில் தங்க கவசங்களை செம்பு என ரெஜிஸ்டரில் பதிவுசெய்த சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சபரிமலை கோயிலில் உள்ள 476 கிராம் எடையுள்ள தங்கம் கர்நாடகா மநிலம் பெல்லாரியில் உள்ள கோவர்த்தன் என்பவரது நகைக்கடையில் விற்பனை செய்ததாக உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலத்த்தில் தெரிவித்துள்ளார். அதனால், கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான கோவர்தன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மே
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 12 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து கொச்சி அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முராரி பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், உன்னிகிருஷ்ணன் போற்றி, சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் பூஜைகளை செய்ததாகவும், அங்கு சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே நடிகர் ஜெயராம் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் அவரிடம் சென்னையில் உள்ள வீட்டில் வைத்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து, சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மலையாள பிரபல நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் சமீபத்தில் ஜாமின் பெற்று திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]