மாஸ்கோ: ரஷியாவில் 24 மணிநேரத்தில் மேலும் 20,498 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி நேரத்தில் மேலும் 20,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து, ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,74,334 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 286 பேர் பலியாக, ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 30,537 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 1,324,419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னமும் 419,378 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.