மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை தொடர்ந்து ரஷியா 4ம் இடத்தில் இருக்கிறது. இந் நிலையில், ரஷியாவில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை அந்நாடு அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் புதியதாக 11,615 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆகியுள்ளது. அதனை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 12,37,504 ஆக உயர்ந்து உள்ளது. 24 மணி நேரத்தில் 188 பேர் உள்பட இதுவரை 21,633 பேர் பலியாகி இருக்கின்றனர்.
24 மணி நேரத்தில் 6,252 பேர் குணமடைந்துள்ளனர். 2,27,265 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். ரஷியாவில் தொடக்க காலத்தில் ஒருநாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை என்பது சராசரியாக 4,000 என்ற அளவில் காணப்பட்டது. ஆனால் அது தற்போது, ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவருவது குறிப்பிடத்தக்கது.