சென்னை:
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மாலை 3 மணி நிலவரப்படி திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 137 இடங்களிலும், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 166 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்ற முடிந்து இன்று 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை முதலே திமுக, அதிமுக கட்சிகள் சில பகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. பகல் 1.30 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு பொறுப்புகளில் திமுக 78 இடங்களிலும், அதிமுக 37 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
அதுபோல, 5,067 ஊராட்சி ஒன்றிய வார்டு பொறுப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 141 இடங்களில் திமுகவும், 137 இடங்களில் அதிமுகவும், 5 இடங்களில் பாமகவும், 4 இடங்களில் தேமுதிகவும், 2 இடங்களில் அமமுகவும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போது 3 மணி நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கூட்டணி 127 இடங்களையும், திமுக கூட்டணி 137 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
அதுபோல, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கூட்டணி 149 இடங்களிலும், திமுக கூட்டணி 166 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.