டில்லி:
‘தட்கல்’ டிக்கெட் நேரத்தில் மாற்றம்; ரத்து செய்யும் போது, 50 சதவீத கட்டணம் திரும்பப் பெறுவது; காத்திருப்போர் பட்டியல் இருக்காது என்பது உள்ளிட்ட பல புதிய சலுகைகளை,  வரும் ஜூலை, 1 முதல் ரயில்வே அமைச்சகம் செயல்படுத்த உள்ளதாக, ‘வாட்ஸ் ஆப்’  உட்பட சமூகவலைதளங்களில் தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
download (3)
இத குறித்து ரயில்வே அமைச்சம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“வாட்ஸ்அப் உட்பட சமூகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கும் அந்த தகவல்களை நம்ப வேண்டாம்.  ரயில்வேயில், ஜூலை, 1 முதல் எந்தவொரு புதிய மாற்றமும் கொண்டு வரப்படவில்லை
காத்திருப்போர் பட்டியல் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்
டிக்கெட் ரத்தாகும் பட்சத்தில், திரும்பப் பெறும் கட்டணத் தொகை குறித்த நடைமுறை, 2015 நவம்பரில் வகுக்கப்பட்ட விதிமுறைகளே தொடர்ந்து அமலில் இருக்கும்
தட்கல் டிக்கெட் பெறும் நேரம் மற்றும் பணம் திரும்பப் பெறுவதில் எந்தவித மாற்றமும் இல்லை
ரயில்வேயில் உதவி எண், ‘139’ ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது
இறங்கும் இடம் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் வசதி, ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது
ரயில்வே புதிய கால அட்டவணை, அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும்” என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.