சென்னை:

வதந்திகள் உயிருக்கே ஆபத்து விளைவிப்பது கவலை அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம்.

சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]