தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமாருடன் லாலு கட்சி கூட்டணியா?

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில் பலமுனை போட்டி நிலவினாலும், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அணிக்கும், லாலு பிரசாத் யாதவின் ஆர். ஜே.டி. அணிக்கும் இடையே தான் பிரதான போட்டி.
லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், தண்டனை பெற்று சிறையில் இருப்பதால், அவரது இளையமகன் தேஜஸ்வி யாதவ் , எதிர்க்கட்சி கூட்டணியை வழி நடத்துகிறார்.
அவரை முதல்வர் வேட்பாளராக, எதிர்க்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் செல்லும் இடமெல்லாம் பெருங்கூட்டம் திரள்கிறது.
இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால், நிதிஷ்குமாருடன், தேஜஸ்வி கை கோர்ப்பார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேஜஸ்வி யாதவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:
‘’தேர்தலுக்குப் பிறகு நிதீஷுடன் ஆர்.ஜே.டி. கூட்டணி வைக்கும் என்பது அபத்தமானது. எனது கூட்டங்களில் மக்கள் திரள்கிறார்கள். நிதிஷ்குமார் மீதுள்ள கோபம் தான் இதற்குக் காரணம். எங்கள் கட்சிக்கு நிச்சயம் தனி பெரும்பான்மை கிடைக்கும்.
தங்களின் ஒட்டுமொத்த ஆதரவை எங்களுக்கு அளிக்கப் பீகார் மக்கள் தயாராகி விட்டார்கள். பீகாரில் தொங்கு சட்டமன்றம் ஏற்படாது. நிதிஷ்குமார் களைத்துப் போய்விட்டார்., பீகாரை ஆளும் திறன் அவருக்கு இல்லை.’’ என்று பொங்கினார். தேஜஸ்வி.
Patrikai.com official YouTube Channel