சென்னை: சென்னை புறநகர் ரயிலில் இன்றுமமுதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்  விதிக்கப்படும் என்றும்,  இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவுறுத்தி உள்ளதுடன்,  சீசன் டிக்கெட் பெற்றவர்கள் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் அடையாள சான்றிதழை பயணத்தின் போது உடன் வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான பரவல் தீவிரமடைந்துள்ளது. இது கொரோனா மூன்றாவது அலை என கருதப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக  சென்னை புறநகர் ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே இன்று முதல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களில் தினசரி பயண டிக்கெட் அல்லது சீசன் டிக்கெட் பெறும் போது 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள சான்றை காட்டினால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். ஏற்கெனவே சீசன் டிக்கெட் பெற்றவர்கள் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் அடையாள சான்றிதழை பயணத்தின் போது உடன் வைத்திருப்பது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளால் யூடிஎஸ் செயலியில் சேவை கிடைக்காது. பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் நம்பர் அச்சிடப்படும் என்றும், மாஸ்க் அணியாமல் பயணித்தால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் .

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.