திருச்சி: திருச்சி அருகே அரசு இலவசமாக கட்டி கொடுக்கும், சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம் வசூலில் திமுக ஒ.செ-க்கள் ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 100 பேரிடம் இவ்வாறு வசூல் வேட்டை நடைபெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது. மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு கட்டிகொடுத்தும், சமத்துவபுர வீடுகள் முறையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், ஏற்கனவே வீடு மற்றும் நில,புலம் உள்ளவ வசதியானவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, தேர்வு செய்து விட்டார்கள். முழுக்க முழுக்க பணத்தை வைத்து மட்டுமே வீடுகளை ஒதுக்கி உள்ளார்கள் என அமைச்சர் நேருவின் உதவியாளர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் மீது, அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளனர். இது திமுக அமைச்சர் நேருவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. 
திருச்சி மாவட் டம், துறையூர் அருகே மங்கம்பட்டி, தளுகை, சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே தண்ணீர் பந்தல் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 140 வீடுகள் கட்டி தயாராக உள்ளன. இதில் ஒரு வீடு ஒதுக்குவதற்கு என 100 வீடுகளுக்கும் தலா ரூ.3 லட்சம் வசூல் வேட்டை நடைபெற்று வருகிறது என திமுக ஒன்றிய செயலாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘முதலில் ரூ.1 லட்சம் கேட்டார்கள். பின்னர் ரூ.2 லட்சம் என்றார்கள். கடைசியாக ரூ5 லட்சம் வரை கேட்டார்கள்’’ என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், தொடர்ந்து பணத்தை கூட்டி வருவதை கண்டித்தும், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தர வலியுறுத்தியும் , அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, பெண் ஒருவர் கட்டுக் கட்டாக பணத்துடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. போராட்டம் கைவிடப்பட்டது
இதுகுறித்து கூறிய அப்பகுதி மக்கள், அரசு அதிகாரிகள், அரசு கூறிய வாக்குறுதியை மீறி, தங்களக்கு வீடுகளை ஒதுக்காமல், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் வீடுகளை ஒதுக்கி வருகிறார்கள். இந்த வசூல் வேட்டையில் ஒன்றிய செயலாளர்களான உப்பிலியாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம், உப்பிலியாபுரம் தெற்கு ஒன்றியசெயலாளர் அசோகன் ஆகிய இருவரும் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால், இவர்கள் பணம் பெற்ற அனைவருக்கும் வீடுகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களும்சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத திமுகவினர், சர்வாதிகாரிகள் போல் செயல்படுவதாகவும், வேறு ஏதாவது கேட்டால் அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பி அருண் நேரு எங்களுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். எங்களை எதுவும் செய்ய முடியாது. அசைக்க முடியாது என்று மிரட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
[youtube-feed feed=1]