சென்னை: தமிழகஅரசு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்  ரூ.1,000  உதவித்தொகை வழங்கும் என அறிவித்திருந்தது. அதன்படி, அந்த  திட்டத்துக்கு விண்ணப்பங்கள் பெற்றப்பட்டு வருகிற்து. இந்த திட்டத்தில், உதவிக்தொகைக்காக இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 17ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், மாணவிகளுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டத்துக்கு இதுவரை  2லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றவர், கல்லூரிகளில் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.