டில்லி

ரண்டாம் முறையாக ஏர் இந்திய நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் டி ஜி சி டி அதிகாரிகள் கொச்சி, தில்லி, பெங்களூரு விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விமானங்களைத் தாமதமாக இயக்குதல், விமானங்கள் ரத்து செய்யப்படுதல், விமான பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத இருக்கைகளில் பயணித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதிருத்தல் என ஏர் இந்தியா நிறுவனம் மீது புகார்கள் கூறப்பட்டது.

கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இதற்கு விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் விமான நிறுவனம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அந்த விளக்கம் இயக்குநரகத்துக்குத் திருப்தியாக இல்லை.  எனவே விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பயணிகளின் விமானச் சேவையில் குறைபாடு இருந்ததால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது எர் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக விதிக்கப்படும் அபராதம் ஆகும்.  ஏற்கனவே கடந்த அனடு ஜூன் மாதம் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்று கூறி கடந்த ஆண்டு ஜூன் மாதமும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.