திருவனந்தபுரம்:

கேரள அரசு பஸ்களில் ரூ.1 கோடி செலவில் செய்யப்பட்டிருந்த அரசு சாதனை விளம்பரங்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.


ஆளும் இடதுசாரி அரசின் 1,000-வது நாளை கொண்டாடும் வகையிலும், பல்வேறு துறைகளின் சாதனைகளை தெரிவிக்கும் வகையிலும்
கேரள அரசு பஸ்களில் ரூ.1 கோடி செலவில் அரசு தரப்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால், இந்த விளம்பரங்களை அகற்றுமாறு ஆளும் கட்சியினருக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா உத்தரவிட்டிருந்தார்.  இதனையடுத்து இந்த விளம்பரங்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.
கேரள அரசின் சார்பில் இயங்கும் 5 ஆயிரம் அரசு பஸ்களின் சாதனை விளம்பரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.