டோக்கியோ
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.
பிரபல டென்னிஸ் வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரோஜர் ஃபெடரருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அதையொட்டி அவர் 2020 ஆம் ஆண்டு பல போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். மார்ச் மாதம் தோகா ஒப்பன் டென்னிஸ் போட்டிகளில் இரண்டாம் சுற்றில் நாக் அவுட் ஆனார்.
அதைத் ஹ்டொடர்ந்து ஜெனிவா ஒப்பன போட்டியில் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். உலகத்தின் நம்பர் 1 ஆக இருந்த ரோஜர் ஃபெடரர் பிரஞ்ச் ஒப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகினார். விம்பிள்டன் போட்டியில் நான்காம் சுற்றுக்கு நுழைந்தும் போட்டியில் இருந்து தாமாக விலகினார். அப்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று ரோஜர் ஃபெடரர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். தமது முழங்கால் புல்வெளி மைதானத்தில் விளையாட அனுமதிக்காததால் தாம் போட்டிகளில் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பல டென்னிஸ் பிரபலங்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஃபெடரரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.