சென்னை:
சாலை விபத்து உயிரிழப்பு இருமடங்கு குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் சாலை விபத்து உயிரிழப்பு இருமடங்கு குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இன்னுயிர் காப்போம் திட்டத்தால், சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை இரு மடங்காக குறைந்துள்ளது. விபத்தில் பாதித்தோருக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.