சென்னை: இந்தியாவின் பணக்கார இசையமைப்பாளரான ஏர்.ஆர்.ரஹ்மான் தனது 57வயதில் மனைவியை பிரிந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1728 கோடி. ரஹ்மான் தம்பதியினருக்கு விவாகரத்து வாங்கிக்கொடுத்தவர், மும்பையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் வந்தனா ஷா என்பதும் தெரிய வந்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானுவிற்கு விவாகரத்து பெற்றுத் தந்த வந்தனா ஷா இந்தியாவின் புகழ்பெற்ற விவாகரத்து வழக்கறிஞர் ஆவார்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளளரான ஏர்.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் திருமணம் ஆகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், திடீரென தற்போது இருவரும் பிரிந்துள்ளது, திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025ம் ஆண்டு வந்தால், அவர்களின் 30வது ஆண்டு மார்ச் மாதம் வ்நதால் அவர்களின் 30வது ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட இருந்த நிலையில், தனது 57 வயதில் திடீரென இருவருக்கும் மனமுறிவு ஏற்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானு தம்பதிகளுக்கு கதீஜா, ரஹீமா என்கிற இரண்டு மகள்கள் மற்றும் அமீன் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளை கடந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கும் இசையமைத்து உலக புகழ் பெற்றவர். இரு முறை ஆஸ்கர் அவார்டு பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் . இந்திய திரையுலகின் பணக்கார இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு, ரூ.1728 கோடி என கூறப்படுகிறது.
இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் – அவரது மனைவி சாய்ரா பானு தம்பதி இந்திய திரையுலகின் ரசிகர்களால் கொண்டாடப்படும் தம்பதிகளில் ஒருவர் ஆவார்கள். ஆனால், நேற்று இரவு (நவம்பர் 19ந்தேதி) ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சி அடையும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ராபானு இருவரும் பிரிவதாக பிரபல வழக்கறிஞர் வந்தனா ஷா அறிவித்துள்ளார்.
பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத இசையமைப்பாளர், என ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா தன்னுடைய வழக்கறிஞர் மூலம், நேற்று அறிக்கை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்ட வந்தனா ஷா இந்தியாவின் புகழ்பெற்ற விவாகரத்து வழக்கறிஞர் ஆவார். இவர் மும்பை மற்றும் புனேவில் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். இந்தியாவின் பிரபலமான அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்களுக்கு விவகாரத்து பெற்றுத் தந்தவர் வந்தனா ஷா.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்துள்ளார். இதன்மூலம், ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் வாழ்ந்த 29ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். வரும் 2025 மார்ச் மாதம் வந்தால் அவர்களின் திருமண வாழ்க்கை 30 ஆண்டுகளை எட்டியிருக்கும்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளனர். இதுகுறித்து சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட கணிசமான மன உளைச்சலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு இருந்த போதிலும், பிரிவது என தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். பதட்டங்கள் மற்றும் சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா வலியுறுத்தினார். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் தனியுரிமை மற்றும் புரிதலை அவர் கோருகிறார், ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை வழிநடத்துகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ரா தரப்பில் இருந்து வெளியான அறிக்கைக்கு பின்னர், தன்னுடைய திருமண முறிவு குறித்து, ஏஆர்ரகுமான் தரப்பிலும் நள்ளிரவு 12:10 மணி அளவில் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது,
” அதில், “நாங்கள் இருவரும் 30 ஆண்டுகளை ஈட்டுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்கு தெரியாத ஒரு முடிவாக தெரிகிறது, கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் எடையை கண்டு நடுங்கலாம்.
இந்த பலவீனமான அத்தியாயத்தை நோக்கி நாம் நடக்கும்போது என தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பு கொடுக்கு மாறு ஏ ஆர் ரகுமான் அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார் “.
பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்ட வைக்க நினைத்த போது அதற்கான பொருத்தமான இடம் கிடைக்கவில்லை. எங்கள் மீது அன்பு காட்டி எங்கள் தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
ஏஆர் ரஹ்மான் தம்பதிகளின் இந்த அறிவிப்பு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏஆர் ரஹ்மான் ரசிகர்களும் நொந்துபோய் உள்ளனர்.
இந்த நிலையில் தனது கணவர் குறித்து சாயிரா பானு நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் தனது கணவர் குறித்து, சாயிரா கூறுகையில் மற்ற கணவன் மனைவி போல் நாங்கள் இருவரும் பைக்கில் ரவுண்ட் செல்வோம். அவருக்கு பைக் ஓட்டுவது என்றால் அத்தனை பிரியம். விதவிதமான பைக்குகளை ஓட்டி பார்க்க ஆசைப்படுவார். வீட்டிலிருக்கும் பைக்கை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருவரும் ரவுண்ட் செல்வோம். அதிலும் ரஹ்மான் ஹெல்மெட் கூட அணிய மாட்டார். என்னை அவர் எப்போதும் பைக்கில் அழைத்து செல்வதையே விரும்புகிறேன். அவரும் எனது ஆசையை அவ்வப்போது நிறைவேற்றிவிடுவார் என்றார் சாயிரா.
இதை ரகுமானும் வெட்கத்துடன் ஒப்புக் கொண்டார். இப்பேர்பட்ட தம்பதிகள் திடீரென பிரிய முடிவு செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.