சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே தெரிவித்தபடி 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.  2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும்   நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியின் நிதி நிர்வாக சீர்கேடு குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கைவெளியிட்டு உள்ளது.  மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பது கறித்து, தமிழகத்துக்கு வரவேண்டிய வருவாய் குறைந்தது ஏன்,  2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது  குறித்தும் வெள்ளை அறிக்கையில் விளக்கப்பட்டு உள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த  5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் இழப்பு இல்லை. 2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்றும் கூறினார்.

2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரம் கோடியாகவும், 2016-21ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது. இதுபோன்று 2021 – 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை 3.16 சதவீதமாக  ஆக உள்ளது
தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது; 2006-2011 தி.மு.க. ஆட்சியில் அரசின் வருமானம் உபரியாக இருந்தது. வருமானம் இல்லாத அரசாங்கம் எந்த பிரச்சினையை சந்திக்கும் என்பது அனைவரும் அறிந்ததே; தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டது.
தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்டின்போது மொத்த கடன் ரூ.5,70,186 கோடியாக இருந்த‌து. தமிழகத்தில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை உள்ளது  கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்டரூ. 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50 சதவீதம்  வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம்.
2011 – 16ம் ஆண்டு ஆட்சியில் திட்டமிடப்படாத செலவுகளால் வருவாய் பற்றாக்குறை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது என கூறினார்.