சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்த,  நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர், ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று  சமர்ப்பித்தது.

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் கடந்த ஜூன் 10ம் தேதி நீதிபதி .கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து தகவலைப்பெற்று  ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே..ராஜன் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர். 86,000க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்களை குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

ந்த கருத்துக்களின் அடிப்படையில், ஏ.கே.ராஜன் குழு ஆய்வு செய்து,  தனது ஆய்வு அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீட் தேர்வு ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த  அறிக்கையில்,  நீட் தேர்வு குறித்து  86,342 பேர் நீட் தேர்வு குறித்து தகவல் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.