லக்ஷ்மண் குமார் இயக்கிய ‘மசாலா படம்’ மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மா.
கடந்த ஜூன் மாதம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில், போட்டியாளராகக் கலந்து கொண்டு பிரபலமானவர் .
ரேஷ்மாவுக்கு முதல் திருமண வாழ்க்கை சில வருடங்களில் கசக்க, கணவரைப் பிரிந்தார். பின்னர், அமெரிக்காவில் வசித்தபோது, அங்கு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான்.இரண்டாவது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய நண்பர் நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் ரேஷ்மா, இதை கண்ட மக்கள் ரேஷ்மா மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்தனர் .
இந்த வதந்தி குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் ரேஷ்மா. “எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை, வெறும் யூகங்களே… என்னைப் பற்றிய தவறான விஷயங்களைத் தயவுசெய்து பரப்ப வேண்டாம். நன்றி” எனத் தெரிவித்துள்ளார் ரேஷ்மா.