மும்பை: ரிபப்ளிக் டிவி எங்களுக்கு பணம் கொடுத்தது என டிஆர்பி முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
டிஆர்பி ரேட்டிங்கிற்காக, முகவர்கள் மூலம் கிராமப்பகுதிகள் உள்பட சில இடங்களில், அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு, முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ள அர்னாப் கோஷ்வாமியின் ரிப்ப்ளிக் டிவி சேனல், இந்தமுறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் வீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். வீடுகளுக்கு வழங்கப்படும் செட் அப் பாக்ஸில் அதிகம் மக்கள் தங்கள் சேனலை பார்ப்பது போல் காட்டி டிஆர்பி மோசடியை அரங்கேற்றியதாக ரிபப்ளிக் டிவி மற்றும் இரண்டு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் செட்அப் பாக்ஸில் தில்லுமுல்லு செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ரிபப்ளிக் டிவி நிறுவனத்தார் விசாணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபக் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா என்ற இரண்டு சேனல்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கின் விசாரணையின்போது, டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர், அப்போது தங்களுக்கு முறைகேடான செயலில் ஈடுபட பணம் கொடுத்தனர் என்று கூறி இருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் உறுதிபடுத்தி உள்ளனர். மூன்று சாட்சிகளும் ரிபப்ளிக் டிவி அதிகாரிகளின் மேற்பார்வையில், பார்வையாளர்களின் மோசடியில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தவர், வழக்கு விசாரணையில் இருப்பதால் மேலும் தகவல்கள் தெரிவிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.