சென்னை: ரேனிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, கோலமாவு கோகிலா உள்பட பல படங்கள் மூலம் பிரபலமானவர்  காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன்.  உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி   காலமானார்.
மதுரையை சேர்ந்தவர் தீப்பெட்டி கணேசன். இயக்குனர்  சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, ரேணிகுண்டா, கோலமாவு கோகிலா, பில்லா 2 என பல படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். துணை கதாப்பாத்திரங்களே ஏற்று நடித்திருந்தாலும் அதிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்தின்போலு, குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லை என்று கண்ணீர் விட்டு, தனது சோகத்தை  வெளிப்படுத்தியவர்.  தற்போது சொந்த ஊரில் வசித்து வரும் அவருக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச் பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக இயக்குனர் சீனுராமசாமி வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். தீப்பெட்டி கணேசன் மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.