சென்னை:

பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம்  2ந்தேதி தொடங்கி மே 31ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று ரேன்டம் எண்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டை விட சுமார் 30ஆயிரம் மாணவர்கள் குறை வாகவே விண்ணப்பித்து இருப்பதாக தமிழகஅரசின்  உயர்கல்வி ஆணையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று கலந்தாய்வுக்கு முன்னதாக வெளியாகும் ரேண்டம் எண் இன்று வெளியாகவுள்ளது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களின் ‘கட்-ஆப்’ மதிப்பெண்களின் அடிப்படையில்ரேண்டம் எண் இன்று வெளியாகவுள்ளது.

ஜூன் 16ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும்.ஜூலை 3ம் தேதி முதல் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 20ஆம் தேதியிலிருந்து சிறப்பு பிரிவினருக்கும், ஜூலை 3ஆம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கும்கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது.

இந்தாண்டு முதல் முறையாக தொழில்நுட்பக்கல்விஇயக்குனரகம் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கலந்தாய்வு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில், அந்தந்த பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.