டெல்லி: ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களின் மோசடிகளை தடுக்கும் வகையில், புதிய வழிமுறைகளை வகுக்க மத்தியஅரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பா.ஜ.க பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வாடிக்கை யாளர்களுக்கு வழங்கும் ஒப்பந்தங்கள், தன்னிச்சையானதாகவும், ஒருதலைபட்ச மானதாகவும் உள்ளன. உறுதி அளித்த நேரத்தில், கட்டுமானங்களை முடித்து, கட்டடத்தை ஒப்படைக்காவிட்டால், அந்த நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாதபடியான சட்ட நுணுக்கங்களுடன், ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.
இதுபோன்ற நடவகைகள் தொடர்பாக, போலீசிடம் புகார் அளித்தால், சட்ட காரணங்களால், அவர்கள் வழக்கு பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மன உளைச்சல் மற்றும் பொருள் இழப்புகளளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற மோசடிகள் கட்டுமானத் துறையில் தொடர்கிறது. .அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முறையான அனுமதிகள் பெறுவதற்கு முன்பே, அதன் விற்பனையை துவங்கும் நிலையிம் அதிகரித்த வருகின்றன. இதுபோன்ற முறைகேடுகள் அனைத்தையும் கட்டுப் படுத்த, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மற்றும் வாடிக்கை யாளர்களிடையே, முறையான ஒப்பந்தங்களை வகுக்க மத்திய அரசு புதிய வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel