சென்னை: திடீர் உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் நலமோடு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அரசுமுறை பயணமாக சென்னை வந்திருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென அஜீரண கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நலமாக உள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜீரண கோளாறு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.