டில்லி:
கடன் தொகைக்காக முன்கூட்டியே அபராதம் வசூலிக்க NBFC (Non Banking Financial Company) எனப்படும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தனிநபர் கடன் வாங்குபவர்களிடமிருந்து முன் கட்டணம் செலுத்துதல் அல்லது முன்கூட்டியே கட்டணம் வசூலிப்பதை தடை செய்து உத்தரவிட்டு உள்ளது.
“தனிப்பட்ட கடனாளர்களுக்கு வணிகத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக அனுமதிக்கப்பட்ட எந்தவொரு கடன்களிலும், முன்கூட்டியே கட்டணம் / முன்கூட்டியே செலுத்தும் அபராதங்களை வசூலிக்காது” என்றும், முன்கூட்டியே கடன் கட்டணம் வசூலிப்பது என்பது எந்தவொரு கடனளிப்பவ ருக்கான கட்டண வருமானத்தின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளது.
மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அதனுடன் தொடர்புடைய தொடர்புடைய விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு, வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு, அடமானக் கடன்களுடன் தனிநபர் கடன் வாங்குபவர்களிடமிருந்து இத்தகைய கட்டணங்கள் அல்லது அபராதங்களை வசூலிக்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.