வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, புன்னகையுடன் காணப்படும் ‘சூரியன்’ படத்தை வெளியிட்டுள்ளது. இது பேசும் பொருளாக மாறி உள்ளது.
நாசா விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ள ஒரு செயற்கைக்கோள் இந்த வார தொடக்கத்தில் சூரியனில் மகிழ்ச்சியான முக வடிவமாகத் தோன்றிய படத்தைப் படம்பிடித்து அனுப்பி உள்ளது. அதாவது நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சூரியனை ‘சிரிக்கும்’ புகைப்படத்தை படம்பிடித்து அனுப்பு உள்ளது. இந்த படத்தை பார்த்த நாசா விஞ்ஞானிகள் வியப்படைந்து, அதை நாசாவின் டிவிட்டர் தளத்தில் பதிவேற்றி உள்ளனர்.
அதில், நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சூரியனை “சிரிக்கும்” பிடித்தது. இந்த படத்தை பார்த்தபோது, சூரியன் “புன்னகையுடன்” காணப்பட்டதாக தெரிகிறது என்றும், இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. எப்போதும் சிறிது சிமிட்டுகிறது, மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகிறது. புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும் என நாசா விளக்கி உள்ளது.
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.