சென்னை: ராமேஸ்வரம் – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் தொடங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது. இதனால், மேலும் பல பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கவும், வந்தேபாரத் ஸ்லிப்பர் கோச் ரயில் இயக்கவும் இந்தியன் ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அதற்கான நடவடிக்கைளை தெற்குரயில்வே மேற்கொண்ட வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.90.20 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் 2022 மே மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதையடுத்து, அங்கு சென்ற தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ராமேசுவரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையமாக மாற்றப்பட்டு, கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்குத் தேவையான வாகன நிறுத்துமிடம், குளிரூட்டப்பட்ட ஓய்வறை, உணவகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் பணிகள் நடக்கின்றன. இன்னும் ஒன்றரை மாதத்தில் பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு ரயில் நிலையம் கொண்டு வரப்படும்என்றார்.
இதையடுத்து வந்தேபாரத் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், ராமேசுவரத்திலிருந்து அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர், பாம்பன் கடலில் அமைந்துள்ள பழைய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இரும்பு தூக்குப் பலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது. தூக்குப் பாலத்தை பாதுகாப்பான முறையில் அகற்றி, அதை ராமநாதபுரம் அருகே பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றவர்,
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, அதற்கான ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. அனுமதி கிடைத்த பின்னர் ரயில் பாதை அமைக்கும் பணிகளைத் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]