டில்லி:
இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 27வது நினைவு தினம் நாடு முழுவதும் காங்கிரசாரால் அனுசரிக்ககப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டில்லியில் உள்ள வீர் பூமியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜீவ்காந்தி மகள் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் வீர் பூமியில் மலர் தூவி மரியாதை செய்தனர்.
ராஜீவ்காந்தியின் மகனாக ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்காவுடன் வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு வந்து கண்ணீர் மல்க மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது துக்கத்தின் காரணமாக பிரியங்கா காந்தியின் கண்ணில் கண்ணீர் பெருக்கடுத்தது. அதன் காரணமாக தனது சகோதரர் ராகுல்காந்தியின் தோழில் சாய்ந்தார். அவரை ராகுல்காந்தி ஆறுதல்படுத்தி அழைத்துச் சென்றார்.
இந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. தந்தை இழந்து வாடும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை……
தேசத்தின் இளம்பிரதமராக பதவி ஏற்று, புதிய பொருளதாரக்கொள்கைகள் மூலம் இந்தியாவை உலக நாடு களுக்கு இணையாக உயர்த்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு 27 வருடங்கள் ஓடிவிட்டது.
ஆனால், அவர் விட்டுச்சென்ற நற்பணிகள் இன்றும் தொடர்ந்து வருகிறது.