ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோர் திரைத்துறையில் அதிக வரி செலுத்துபவர்கள்…
ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமாருக்கு சினிமா உள்ளிட்ட கேளிக்கை துறையில் அதிக வரி செலுத்துபவர்கள் என்ற சான்றிதழ்களை வருமான வரித்துறை வழங்கியுள்ளது.
வருமான வரித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சான்றிதழ்களை வழங்கினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்பாக அவரது மகளும் திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
Proud daughter of a high and prompt tax payer 😇🏅🌟
Many thanks to the #incometaxdepartment of Tamilnadu and Puducherry for honouring appa on #incometaxday2022 #onbehalfofmyfather pic.twitter.com/x4timxMDtd— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) July 24, 2022
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “அதிக அளவு மற்றும் உடனடி வரி செலுத்துபவரின் மகளாக பெருமைப்படுகிறேன். எனது தந்தையை கௌரவப்படுத்திய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறைக்கு மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி மட்டுமன்றி பாலிவுட்டில், அக்ஷய் குமாருக்கும் அதிக வரி செலுத்தியவர் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. நடிகர் தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பில் இருப்பதால், அவர் சார்பாக வருமான வரித்துறையின் மரியாதை சான்றிதழை அவரது குழு ஏற்றுக்கொண்டது.