சென்னை

மது வளர்ச்சிக்கு ரஜினிகாந்த் காரணமில்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் பல்வேறு திறமைகள் கொண்டவர் ஆவார்.   நடிகர் ரஜினிகாந்த் மருமகனான இவர் சமீபத்தில் தனது மனைவியும் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.  இது திரையுலகை மிகவும் பரபரப்பு ஆக்கியது.

தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி பிறகு காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் புகழ் அடைந்தார்.     தனுஷ் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் எனப் பல இனங்களிலும் புகழ் பெற்றுள்ளார்.   இவரது முன்னேற்றத்துக்கு இவர ரஜினிகாந்த் மருமகன் என்பதே முக்கிய காரணம் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இது குறித்து தனுஷ்,

”எனக்கு நடிப்பது விருப்பமில்லாமல் இருந்த போது எனது தந்தை கஸ்தூரி ராஜா வற்புறுத்தலால் திரையுலகுக்கு வந்தேன்.  பிறகு எனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றேன். 

எனவே எனது வளர்ச்சிக்கு எனது அண்ணனும் தந்தையுமே காரணம்.  ரஜினிகாந்த் மருமகன் என்னும் முறையில் எனக்கு எவ்வித முன்னேற்றமும் கிடைக்கவில்லை.  எனவே எனது வளர்ச்சிக்கு ரஜினிகாந்த் காரணமில்லை.  எனக்கு ரஜினிகாந்த் மருமகன் என்னும் பெயர் மட்டுமே அவரால் கிடைத்தது”

எனத் தெரிவித்துள்ளார்.