ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திராகாந்தி ஊரக  வேலைவாய்ப்பு திட்டம் 125 நாட்களாக அதிகரிக்கப்படுவதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.

தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, இந்திய தொழிலாளர் சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கை ஆகும், இது ‘வேலை செய்யும் உரிமை’க்கு உத்தரவாதம் அளிக்கும். இந்த சட்டத்தின்படி,  மத்தியஅரசின் நிதியில், மாநிலங்களில் உள்ள ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தின்படி, ஊரகப்பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு  ஆண்டுக்கு 100 நாட்கள்  பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், இந்திராகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி செயல்படுத்தப்பட்டு வரும்  ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தை  125 நாட்களாக அதிகரிப்பதாக, அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.

100 நாட்களாக இருந்த கிராமப்புற NREGA 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ள முதல்வர் கெலாட்டின் நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.