ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் நீம்ரானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் 5 மணி நேரம் நீடித்தது.

உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இது குறித்து நீம்ரானா காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் கூறியதாவது:

காவல்துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று தொழிற்சாலை நிர்வாகத்திடம் விளக்கம் கோருவோம்.  தீ விபத்தில் ஆலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.