
டில்லி,
தமிழக கவர்னரின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா வேறு துறைக்கு மாற்றப்பட்டதால் அவருக்குப் பதில் புதிய செயலாளராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் கோவை சென்ற கவர்னர், அங்கு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அரசு அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக ஆய்வு நடத்தினார். இது தமிழக அரசியல் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றி வந்த ராஜகோபால் ஐஏஎஸ் ஆளுநரின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய செயலாளர் நியமனம் சார்பாக தமிழக அரசை மத்திய அரசு கண்காணிக்க முயற்சி செய்வதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]