தனக்கு லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் உடன்பாடு உள்ளதாக நடிகை ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்.
பிரபல ரியாலிட்டி கேம் ஷோவான பிக் பாஸ் தமிழின் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் மாடல் ரைசா. 2018-ல் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் உரையாடிய ரைஸா, விவ்-இன்னில் விருப்பம் உள்ளதா என்ற ரசிகர்களின் கேள்விக்கு வீடியோவில் பதிலளித்த அவர், “எனக்கு ஓகே. பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டும்? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும்?” என்று தெரிவித்திருக்கிறார்.