சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாள் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று காலை தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உள்பட  தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள தடுப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் செயலாளர் சிவதாஸ் மீனா உள்பட துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் நடத்தினார்.  அப்போது,  கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் மீண்டும் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.