சென்னை: மழை வெள்ளப் பாதிப்பு குறித்து டெல்டா மாவட்டங்களில் அமைச்சர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையிலும்  ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதில் விவசாயிகளுக்கு பயிர் சேதத்திற்காக ஹெக்டேருக்கு ரூ.6ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட மழை வெள்ளப்பாதிப்பு குறித்து டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேத விவரங்கள் – அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, சாலைகள், வடிக்கால்கள் சீரமைப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.300 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி,  மழை வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த குறுவை – கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குறிப்பாக, பயிர் மறுசாகுபடிக்கு இடுபொருட்கள் வாங்க ஏதுவாக ஹெக்டேருக்கு ரூ.6,038 வழங்கப்படும் என்றும், குறுவை – கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு ₨ 20,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தற்போது நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.