டில்லி

பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நாட்டுப் பாதுகாப்பை குறித்து விவாதிக்காமல் சீருடை குறித்துப் பேசியதால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசார் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நாட்டில் தற்போது சீன படையெடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்கள் நடைபெற்று வருகின்றன.  இது குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.  ஆனால் மத்திய அரசின் தரப்பில் இருந்து இது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.   இந்நிலையில் இன்று பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டம் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவால் நடத்தப்பட்டது.,   இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் சீனா உள்ளிட்ட விவகாரம் குறித்து விவாதிக்க விரும்பினர்.  அதையொட்டி ராகுல் காந்தி சீன ஆக்கிரமிபு மற்றும் லடாக் எல்லையில் உள்ள வீரர்களுக்கு சரியான ஆயுதம் அளிப்பது குறித்துப் பேசத் தொடங்கினார்.  ஆனால் இந்த குழுவின் தலைவரான பாஜகவைச் சேர்ந்த ஜுவல் ஓரம் அவரை பேச விடாமல் தடுத்தார்.

மேலும் இதற்குப் பதிலாக ராணுவம், கடற்படை, விமானப்படையினர் சீருடை மாற்றம் குறித்து விவாதம் தொடங்கப்பட்டுள்ள்சது.   அப்போது ராகுல் காந்தி இடை மறித்து இந்த விவாதம் தேவையற்றது எனவும் தற்போது எல்லையில் நிலவும் சுழல் பற்றி விவாதிக்க வேண்டியதே முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.  ஆனால் அந்த விவாதத்துக்குக் குழுத் தலைவர் அனுமதி அளிக்காததால் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.