டெல்லி

ரவிந்த் கெஜ்ரிவாலை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவர் அடிபணிய மாட்டார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன் தினம் சிறையில் உள்ள அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

நேற்ரு அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை முறைப்படி கைது செய்ய அனுமதி கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது நீதிபதி அமிதாப் ரவத். அதை ஏற்று அனுமதி அளித்ததால் அரவிந்த் கெஜ்ரிவாலை முறைப்படி சிபிஐ கைது செய்தது. நீதிபத் கெஜ்ரிவாலை 3 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

பஞ்சாப் முதல்வர்பகவந்த் மான் தனது எக்ஸ் தளத்தில் கெஜ்ரிவாலின் புகைப்படத்தை வெளியிட்டு,

”இந்த படம் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை பிரதிபலிக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் கொடுமைப்படுத்தினாலும் அரவிந்த் கெஜ்ரிவால் அடிபணியமாட்டார். அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கிடைத்த பிறகு, கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்திருப்பது பாஜகவின் உத்தரவின்பேரில் அது செயல்படுவதை அப்பட்டமாக காட்டுகிறது. விசாரணை அமைப்பின் விண்ணப்பத்தின் மீதான வாதங்களை கேட்டபின் டெல்லி முதல்-மந்திரி குற்றமற்றவர்”

என்று பதிந்துள்ளார்.