புதுச்சேரி
புதுச்சேரி முதல்வர் குடும்ப அட்டைகளுக்கு ரூ. 5000 வெள்ள நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பெஞ்சல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. இய்ஹில் நகர பகுதி மட்டுமல்லாமல் பாகூர், வில்லியனூர், அரியாங்குப்பம், மணவெளி, திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய பெய்த மழையால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காணும் இடங்கள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
மீட்புப்படையினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். பொதும்மக்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ,
”சேதம் அடைந்த படகுகளுக்கு தலா ரூ.10,000, விவசாய நிலம் ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்கப்படும். மழை வெள்ளத்தில் இறந்த மாட்டிற்கு ரூ.40,000, கிடாரி கன்று குட்டிக்கு ரூ.20,000-ம் வழங்கப்படும். சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.10,000-ம் நிவாரணம் வழங்கப்படும். மழை வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். குடும்ப அட்டைகளுக்கு ரூ. 5000 வெள்ள நிவாரணம் வழங்கப்படும்”
எனக் கூறி உள்ளார்.