புதுச்சேரி

டந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ப்துச்சேரியில் மழை பெய்துள்ளது.

பெஞ்சல் புயல், புதுச்சேரியில் தீவிர கனமழையை கொண்டு வந்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மொத்தம் 48.4 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 1995 முதல் 2024 வரையிலான 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 24 மணிநேரத்தில் பெய்த மொத்த மழையில் இது அதிக அளவாகும்

ராணுவ மேஜர் அஜய் சங்வான் தலைமையிலான குழுவினர், கிருஷ்ணா நகர் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் சில இடங்களில் 5 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. எனவே, 500 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் பரிதவித்து நின்றனர். காலை 6.15 மணியளவில் தொடங்கிய அவர்களுடைய மீட்பு பணியில் முதல் 2 மணிநேரத்தில் 100 பேர் வரை மீட்கப்பட்டனர்.

இன்று புதுச்சேரி முதல்வர்0 என். ரங்கசாமி செய்தியாளர்களிடம்,

“ புதுச்சேரியில் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். வெள்ள நீரில் சிக்கி தவிக்கும் நபர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர்”

எனக் கூறியுள்ளார்.