சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால், சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 99,680 என்ற விலையிலும், ஒரு கிராமுக்கு 90 ரூபாய் அதிரித்து 12,460 ரூபாயாகவும் விற்பனை ஆகி வருகிறது. இதன்மூலம் ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டுமானால், செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி உள்பட குறைந்தபட்சம் ரூ.1,20 ஆயிரத்துக்கும் அதிகமான ரூபாய் செலவிட வேண்டிய நிலை உருவாக்கி உள்ளது.

இந்திய மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு பேரதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக, சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்து தங்கம் விலையானது நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் த ங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணங்கள், மத்திய வங்கிகளின் அதிக கொள்முதல், உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலை (பாதுகாப்பான முதலீடாகத் தங்கம்), அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி, வட்டி விகிதக் குறைப்பு (குறிப்பாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்), இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் நகைகளுக்கான தேவை அதிகரிப்பு, மற்றும் உற்பத்தி செலவுகள் போன்றவை தங்கத்தின் பற்றாக்குறையையும், முதலீடுகளின் தேவையையும் அதிகரிக்கின்றன.
பல நாடுகள் தங்கள் கையிருப்பை அதிகரிக்கத் தங்கத்தை வாங்குகின்றன, இது சந்தையில் தங்கத்தின் விநியோகத்தைக் குறைக்கிறது. சுருக்கமாக, உலகளாவிய பொருளாதார நிலைகள், முதலீட்டாளர்களின் போக்குகள் மற்றும் உள்ளூர் தேவை ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாகும்.
இந்தியாவில், கடந்த நவம்பர் 1ஆம் தேதியன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 90,480 ரூபாயாக இருந்தது. ஆனால், அடுத்த ஒரே மாதத்தில், அதாவது, டிசம்பர் 1ஆம் தேதியன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 96,560 ரூபாயாக விற்பனையானது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 6,080 ரூபாய் அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுமட்டுமின்றி, கடந்த ஒரு மாதத்தை தாண்டியும், தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வருகிறது. ஏறும்போது அதிக அளவில் உயர்வதும், விலை குறைவு என்பது கொஞ்சமாகவே இருப்பதால்,‘ தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 13 தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிகபட்சமாக சவரனுக்கு 2560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. அதன்படி வெள்ளிக்கிழமையன்று தங்கம் ஒரு சவரன் ரூ.98,960 ஆக விற்பனையானது. இதேபோல அன்றைய நாளில் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 6,000 ரூபாய் அதிகரித்தது. சனிக்கிழமையன்று தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்து புதிய விலை உச்சத்தை எட்டி உள்ளது. இன்றைய நிலையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 99,680 (ரூ.1 லட்சத்தை நெருங்கியது) ஆக அதிகரித்துள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி 3 சதவிகிதம் சேர்த்தால், தங்கத்தின் விலை சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுமட்டுமின்றி நகைகள் வாங்க வேண்டுமென்ளால், செய்கூலி, சேதாம் என கூடுததாலாக 10 ஆயிரம் முதல் 18ஆயிரம் வரை கொடுக்க வேண்டியது வரும். அப்படி இருக்கும்போது சவரன் நகை ரூ.120ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு 213 ரூபாய் என்ற பழைய விலையிலிருந்து மேலும் 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 213 ரூபாயாகவும், ஒரு கிலோ 2.13 லட்ச ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
[youtube-feed feed=1]