மும்பை

காராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது மகாராஷ்டிராவில்\ பாஜக, சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று  சட்டசபையில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார்,

”மும்பை பிராந்தியத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் முறையே 26 மற்றும் 25 சதவிகிதம் குறைக்கப்படுகிறது. இதன் படி, பெட்ரோல் விலை 65 பைசா லிட்டருக்கு குறையும். இந்த விலை குறைப்பு மூலம் மும்பை, நவி மும்பை, தானே பிராந்தியங்களில் வாகன ஓட்டிகள் பயன்பெறுவார்கள்”

என்று அறிவித்துள்ளார்.