ஸ்ரீநகர்:

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு எல்லையில் துப்பாக்கி சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்கு மின்சாரம், சாலை உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘தவறான வழிகாட்டுதலால் கல் மற்றும் ஆயுதத்தை கையில் எடுத்த இளைஞர்களால் காஷ்மீருக்கும், நாட்டையும் சீர்குலைத்துள்ளது. இந்த ஸ்திரத்தன்மையற்ற நிலையில் இரு ந்து வெளியே வர மக்கள் முயற்சிக்க வேண்டும். காஷ்மீர் வளர்ச்சியை விரும்பாத வெளிநாட்டு சக்திகள் இங்கு விளையாடிக் கொண்டிருக்கின்றன.

காஷ்மீர் மற்றும் இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு பெற வேண்டும். இது அவர்களின் எதிர்க £லம் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு நல்லதாகும். உங்களது சக்தியை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் வளர்ச்சி தான் தீர்வு. வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் தயாராக இருக்கின்றன’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘நான் பிரதமராக பதவி ஏற்றது முதல் காஷ்மீருக்கு மாநிலத்துக்கு வரமால் ஒரு ஆண்டு கூட பூர்த்தியானது கிடையாது. இந்த ரம்ஜான் புனித மாதத்தில் நபிகள் நாயகம் போதித்த விஷயங்களை நினைவு கூற வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அவரது வாழ்க்கை பாடம் தான் இந்த நாட்டையும், உலகத்தையும் முன்னோக்கி அழைத்து செல்லும் என்பது உண்மை.

ஒவ்வொரு வீடுகளுக்கும் சவுபாக்கியா திட்டத்தின் மூலம் மின்சாரம் வழங்க அரசு முயற்சி மேற்கொண் டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தொடர் மின் வசதி தேவைப்ப டுகிறது. சுகாதாரம், தூய்மையான காற்று ஆகியவையும் தேவைப்படுகிறது. சுற்றுலாவுக்கு உதவும் வகையில் சுற்றுசூழல் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த அரசு தீவிரமாக உள்ளது’’ என்றார்.