சென்னை: மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் இன்று. இதையொட்டி,  கொள்கை ஆசான் பேராசிரியர் க.அன்பழகன்  என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த க.அன்பழகனின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில்  அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கழகம் எனும் கலத்தைப் புயல்கள் தாக்கியபோதெல்லாம் தலைவர் கலைஞரின் பக்கத்துணையாய் நின்று கரைநோக்கிச் செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள்!
என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.
கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்த பேராசிரியர் பெருந்தகை ஊட்டிய திராவிட இனமான உணர்வோடு முன்செல்கிறேன், கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]