பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் படங்களிலும், தொடர்களிலும் நடித்து வருபவர்.
இவர் தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து 117 நாட்களே ஆன நிலையில் இருவரும் விவாகரத்து நோக்கி செல்ல இருப்பதாக ஓகே பத்திரிக்கை (OK! Magazine) செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.
இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை . பிரியங்கா சோப்ரா உடனான இந்த திருமண உறவை முடித்துக் கொள்ள நிக் ஜோனாஸின் குடும்பத்தினர் கருதுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவாகரத்து கதையில் உண்மையில்லை. அது வெறும் வதந்தி மட்டும் தான் என்றும், தற்போது பிரியங்காவும், நிக் ஜோனாஸூம் மியாமியில் குடும்பத்துடன் விடுமுறையை உற்சாகமாக கழித்து வருவதாகவும் பிரியங்கா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.