லக்னோ:

உ.பி. மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியங்கா காந்தி, அவரது சித்தி மேனகா காந்தி போட்டியிலும் சுல்தான்புர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.மாநில கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருகிறார். பிரியங்காவுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் வாக்கு வேட்டையாடி வரும் பிரியங்கா சுல்தான்புர் தொகுதியிலும் ஓட்டு வேட்டையாடினார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக மேனகா காந்தி போட்டியிடுகிறார்.

திறந்த வாகனத்தில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளர்  சஞ்சய் சிங்குடன் வாக்கு சேகரித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் பிரியங்காவுக்கு பிரமாண்டமான  வரவேற்பு கொடுத்தனர். இந்தபேரணி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆனால், அவர் அங்கு ஏதும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.