வயநாடு
வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி திருநெல்லி விஷ்ணு கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு 13 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்லில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த மாதம் 23-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் 28, 29-ந் தேதி என 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்தார்.
தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா காந்தி நேற்று வயநாட்டுக்கு வருகை தந்தார். பிரியங்காவுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த பின்னர் அவர் பழமையான திருநெல்லியில் உள்ள மகா விஷ்ணு கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு பிரியங்கா காந்தி பூஜை பொருட்களை சாமிக்கு படைத்து, சாமி தரிசனம் செய்தார். கோவில் மேல் சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி, தந்திரி பத்மநாபன் உண்ணி நம்பூதிரி ஆகியோர் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர். பிறகு கோவில் நிர்வாகிகளிடம் கோவிலின் பாரம்பரிய பெருமை குறித்து பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.