அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார்  உடல்நலக்குறைவு காரணமாக, அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் வசித்து வருகிறார். இவர் இந்த மாதம் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்தினார். இந்த நிலையில், அவருக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்  யு.என் மேத்தா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது  உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாவுடனான பந்தத்தைப் பற்றி அடிக்கடி பேசும் பிரதமர் மோடி, சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரைச் சந்தித்தார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அவரது 99 வது பிறந்தநாளிலும் அவர் அவளை சந்தித்தார். அவரது நூற்றாண்டு நுழைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் மோடி ‘அம்மா’ என்ற தலைப்பில் ஒரு உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.