சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையில் மாற்றம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  மார்ச் 1ஆம் தேதி  மதுரை வருகிறார் என பாஜக மாநில தலைவர் நயினானர் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும்,  மார்ச் 1ஆம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க இருப்பதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் கள பணிகள் தீவிரமடைந்துள்ளது.  அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி மாதம்  23ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கூட்டணியின் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, வரும் 28ஆம் (பிப்ரவரி)  தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்,  பிரதமரின் தமிழ்நாடு வருகை ஒரு நாள் தாமதமாக மார்ச் 1ஆம் தேதி பிரதமர்  மதுரை வரவுள்ளதாக நயினார் நாகேந்திரன்  கூறினார். மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்க இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ரூ. 40 ஆயிரம் கோடிக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஜய்க்கு விதிக்கப்பட்ட வரிக்கான அபராதம் விவகாரத்தில், அவருக்கான அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவா் ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லி வருகிறாா். இப்போதுதான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது. இனி நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து அவரை எதிா்த்து டிரம்ஸ் அடிப்போம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாள்களில் நேரில் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்ய இருக்கிறேன் என்றாா்.

பிரதமரின் இந்த பயணத்தன்போது, அவர் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க செல்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

[youtube-feed feed=1]